districts

img

54 வயதில் 39 முதுகலை பட்டம்  சென்னை பேராசிரியர் சாதனை

 சென்னை,ஜன.14-  சென்னையை சேர்ந்த பேராசிரியர் கலைப்புனிதன் (54). திருப்பதியில் சட்டக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.   இவர் படித்து பட்டங்கள் பெறுவதில் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். 1988-ல் முதல் முதலாக எம்.ஏ. பட்டம் பெற்ற இவர் தொடர்ந்து 35 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் கலைத்துறை சார்ந்த படிப்புகளில் முதுகலை பட்டப்படிப்புகளை படித்துள்ளார். இதுவரை 26 எம்.ஏ. பட்டங்கள் பெற்றுள்ளார். வரலாற்றுத் துறையில் பி.எச்.டி., வணிகவியல், புவியியல், சட்டத்துறைகளில் முதுகலை பட்டங்கள் உள்பட மொத்தம் 36 முதுகலை பட்டங்கள் பெற்றுள்ளார். இவரது படிப்பு சாதனை லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.